< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு.தி.க. 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்
|2 Aug 2023 5:18 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு.தி.க. சார்பில் 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ1,000 வழங்க வேண்டியும், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடக அரசு திறக்கக்கோரியும், விளைநிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் எனது ஆணைக்கு இணங்க தே.மு.தி.க. சார்பில் வருகிற 10-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஒருங்கிணைந்த மாவட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.