< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஓசூர்- கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி
|2 Feb 2023 9:48 AM IST
மறியல் போராட்டத்தை அடுத்து எருது விடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
இதனிடையே ஓசூர் அருகே கோபசத்திரம் பகுதியில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மறியலில் ஈடுப்பட்டனர். மறியல் போராட்டத்தை அடுத்து எருது விடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.