< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 3,996 கன அடியாக உயர்வு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 3,996 கன அடியாக உயர்வு

தினத்தந்தி
|
15 Jun 2022 4:18 AM GMT

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.11 அடியாக குறைந்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த மே 24-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நிர்வரத்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2,526 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3,996 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று 112.32 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 112.11 அடியாக சரிந்துள்ளது.

மேலும் செய்திகள்