நாகப்பட்டினம்
மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும்
|மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும்
தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.
மண்சாலை
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மண் சாலை தகட்டூர்-கோவிந்தன்காடு செல்லும் சாலையுடன் இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலை கடந்த பல வருடங்களாக மண்சாலையாக உள்ளது. இந்த சாலையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலையை பயன்படுத்தி தான் அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, ரேஷன் மற்றும் கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மழை காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.