மயிலாடுதுறை
மயானத்திற்கு செல்லும் மண் பாதையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும்
|திருக்கடையூர் அருகே மயானத்திற்கு செல்லும் மண் பாதையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்:
மயான சாலை
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் டீ. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதை பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது.
மேலும் இந்த பாதை குறுகிய அளவில் உள்ளது. இறந்தவரின் உடலை இந்த வழியாக கொண்டு செல்லும்போது தடுமாறி வயலில் விழுந்து விடுகின்றனர். மழைக்காலங்களில் சேற்றில் சிக்கிக் கொள்கின்றனர்.
தார்சாலையாக மாற்றித்தர கோரிக்கை
எனவே மயானத்திற்கு செல்லும் மண் பாதையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டீ. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் மண்பாதையை தார் சாலையாக மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்