< Back
மாநில செய்திகள்
உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
திருவாரூர்
மாநில செய்திகள்

உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

தினத்தந்தி
|
2 July 2023 12:15 AM IST

திருவாரூர் நகராட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் கூறினார்.

நகராட்சி கூட்டம்

திருவாரூர் நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகர சபை தலைவர் புவனபிரியா செந்தில் தலைமை தாங்கினார். அகிலா சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், காலை உணவு வழங்கும் திட்டத்தை திருவாரூர் நகரில் விரிவு படுத்தியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நகராட்சி உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்டவைகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

படிப்படியாக நிறைவேற்றப்படும்

இதுகுறித்து நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் கூறுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயணன், மேலாளர் முத்துக்குமார், என்ஜினீயர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்