அரியலூர்
சேற்றில் சிக்கி மான் சாவு
|சேற்றில் சிக்கி மான் செத்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதூர்பாளையம் மருதையாற்று கரையில் வாய்க்காலுக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் பெய்த மழையால் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. பின்னர் தண்ணீர் வற்றிய நிலையில் அப்பகுதி சேறும், சகதியாக காட்சி அளித்தது.
இந்நிலையில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த மான், அந்த பள்ளத்தில் இருந்த சேற்றில் சிக்கியுள்ளது. சேற்றில் இருந்து வெளியே வர முடியாத நிலையில், அந்த மான் பரிதாபமாக ெசத்தது. அந்த வழியாக சென்றவர்கள் அதைக்கண்டு அரியலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் இறந்த மானை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து, புதைத்தனர்.
மேலும் அந்த மான் சேற்றில் சிக்கி சுமார் 3 அல்லது 4 நாட்கள் ஆன நிலையில், அப்பகுதியில் யாரும் செல்லாததால், மானை மீட்க முடியாத நிலையில் அது உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.