< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு சட்டமன்றம் கூடும்போது முடிவு தெரியும் - சபாநாயகர் அப்பாவு
|6 Sept 2022 2:31 AM IST
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் நியமனம் தொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா கொடுத்த மனு தொடர்பாக எடுக்கப்படும் முடிவு குறித்து சட்டமன்றம் கூடும்போது தெரியும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லையில் வ.உ.சி. பிறந்த நாளையொட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினை அவர்களது உட்கட்சி விவகாரம் ஆகும். அதற்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்குள் பல பிரிவுகளாக பிரிந்து உள்ளனர். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தேர்தல் ஆணையமும் உள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் நியமனம் தொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா என்னிடம் கொடுத்த மனு தொடர்பாக எடுக்கப்படும் முடிவு குறித்து சட்டமன்றம் கூடும்போது தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.