< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு..!
|6 Aug 2023 7:04 AM IST
தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
சென்னை,
கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். பெற்றோரின் குற்றச்சாட்டை அடுத்து விசாரணை குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.