< Back
மாநில செய்திகள்
தூக்கில் பிணமாக தொங்கிய பெண் டாக்டர்...  சாவில் மர்மம் இருப்பதாக புகார்
மாநில செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய பெண் டாக்டர்... சாவில் மர்மம் இருப்பதாக புகார்

தினத்தந்தி
|
6 July 2024 2:08 PM IST

பெண் டாக்டர் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தேனி,

தேனி மாவட்டம் சிவசக்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சின்னமனூர் காந்தி சிலை பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். அவருடைய மனைவி மணிமாலா (வயது 38). இவர், சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் தோல் நோய் சிகிச்சை சிறப்பு டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்தநிலையில் வீட்டின் ஒரு அறையில் படுத்திருந்த மணிமாலா நேற்று காலை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைப்பார்த்து மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக மணிமாலாவின் தந்தை மாரியப்பன், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மணிமாலா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்