< Back
தமிழக செய்திகள்

நாகப்பட்டினம்
தமிழக செய்திகள்
அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

8 Aug 2023 12:30 AM IST
அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டில் அண்ணா சிலையில் இருந்து பப்ளிக் ஆபீஸ் ரோடு செல்லும் பாதையான அரியபத்திரப்பிள்ளை தெருவின் முகப்பில் கழிவுநீர் வடிகாலுக்காக தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்த சுவர் உடைந்து பெரிய பள்ளமாக காணப்படுகிறது. தெரு முகப்பில் பள்ளம் உள்ளதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.