நாகப்பட்டினம்
சேதமடைந்த கண்காணிப்பு கேமரா இரும்பு கம்பம் சீரமைக்கப்பட்டது
|சேதமடைந்த கண்காணிப்பு கேமரா இரும்பு கம்பம் சீரமைக்கப்பட்டது
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சேதமடைந்த கண்காணிப்பு கேமராவின் இரும்பு கம்பம் சீரமைக்கப்பட்டது.
இரும்பு கம்பம் சேதம்
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனத்தில் வந்து செல்கின்றனர். நாகையிலிருந்து காரைக்கால், சிதம்பரம், சீர்காழி, புதுச்சேரி, சென்னை செல்லும் அனைத்து அரசு, தனியார் பஸ்கள், வாகனங்களும் நாகூர் மெயின் ரோட்டை கடந்து தான் செல்கிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் போலீசாரால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் இரும்பு கம்பம் அடிபாகத்தில் துருப்பிடித்து சேதமடைந்து காணப்பட்டது. எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த இரும்பு கம்பத்தை மாற்றி புதிய இரும்பு கம்பத்தை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
சீரமைக்கப்பட்டது
இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாழிதழில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சேதமடைந்த இரும்பு கம்பத்தின் அடிபாகத்தில் சிமெண்டு மூலம் சீரமைக்கப்பட்டது. மேலும் புதிய கம்பத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.