< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
30 Aug 2023 2:29 AM IST

அருப்புக்கோட்டை பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரசபை கூட்டம்

அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

கவுன்சிலர் பாலசுப்ரமணியன்:- குடிநீர் பிரச்சினை நிலவி வரும் நிலையில் சாயப்பட்டறைகளில் அதிக அளவு நீரை பயன்படுத்துகின்றனர். அதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

துணை தலைவர் பழனிச்சாமி: முன்பு அனைத்து இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தப்பட்டு இருந்தது. அதனால் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தினர். தற்போது மீட்டர் இல்லாததால் குடிநீரை அனைத்து பயன்பாட்டிற்கும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேதமடைந்த சாலை

முருகானந்தம்:- எம்.டி.ஆர். நகர் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

அப்துல்ரகுமான்:- 10-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினையை விரைந்து தீர்க்க வேண்டும்.

டுவிங்கிளின் ஞானபிரபா:- 5-வது வார்டு பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும், கலைஞர் நகர் 3-வது தெருவில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

ராமதிலகவதி:- பூக்கடை பஜார் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும்.

நடவடிக்கை

மீனாட்சி:- எந்த ஒரு திட்டம் வருவதற்கு முன்பும் அதை நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர்மன்ற தலைவர் உறுதி அளித்தார்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்