< Back
மாநில செய்திகள்
வடபாதிமங்கலத்தில் சேதமடைந்த நடைபாலம் சீரமைக்கப்பட்டது
திருவாரூர்
மாநில செய்திகள்

வடபாதிமங்கலத்தில் சேதமடைந்த நடைபாலம் சீரமைக்கப்பட்டது

தினத்தந்தி
|
13 Aug 2022 11:46 PM IST

வடபாதிமங்கலத்தில் சேதமடைந்த நடைபாலம் சீரமைக்கப்பட்டது

கூத்தாநல்லூர்

தினத்தந்தி செய்தி எதிரொலியாக வடபாதிமங்கலத்தில் சேதமடைந்த நடைபாலம் சீரமைக்கப்பட்டது.

பாலத்தின் சிமெண்டு தளங்கள் இடிந்தது

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில்மாதாகோவில்கோம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்காக வெண்ணாற்றின் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு தளங்களை கொண்டு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த நடைபாலத்தினை கிளியனூர், மாதாகோவில்கோம்பூர், பழையனூர், காக்கையாடி, வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நடைபாலத்தின் நடுமையத்தில் சிமெண்டு தளங்கள் சில இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது. மீதமுள்ள சிமெண்டு தளங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டு உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதனால் தளங்கள் இடிந்து விழுந்த நடைபாலத்தில் சென்று வருவதற்கு அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்ததால், பாலத்தின் முகப்பில் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தடுப்புகள் வைக்கப்பட்டது.

நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி

இதனால் பாலத்தினை முழுமையாக பயன்படுத்த முடியாமல் அந்த பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நடைபாலத்தினை புதிதாக சிமெண்டு தளங்கள் அமைத்து சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து நடைபாலத்தில் சேதமடைந்த இடத்தில் புதிய சிமெண்டு தளங்கள் அமைத்து சீரமைத்தனர். விரைவாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்