< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
11 Jun 2023 7:15 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

பாலப்பணி முடிக்கப்படுமா?

சித்திரங்கோடு காயகரை பகுதியில் பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாலப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிருஷ்ணன், சித்திரங்கோடு.

தூர்வார வேண்டும்

பூதப்பாண்டி சாய்பாபா கோவில் தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஓடை யை முறையாக தூர்வாரி பராமரிப்பது இல்லை. ஓடையில் குப்பைகள், கழிவுகள் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையில் கழிவுகளை அகற்றி தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி.

வாகன ஓட்டிகள் அவதி

முளகுமூடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடியூரில் பாத்திரமங்கலம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ெபரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கம், கோடியூர்.

விபத்து அபாயம்

நாகர்கோவில் கோட்டார் சிதம்பரம்நகரில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் திருப்பத்தில் சாலையோரம் கழிவுநீர் ஓடை மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். அவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் நலன்கருதி சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்பு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கென்னடி ரோட்ரிக்கோ, சிதம்பரம்நகர்.

சாலை சீரமைக்கப்படுமா?

பரமார்த்தலிங்கபுரம் சானல்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் நாகர்கோவில்-கணியாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா?.

-கிங்ஸ்லீ, கணியாங்குளம்.

சுகாதார சீர்கேடு

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் பகுதியில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் அருகில் உள்ள கழிவுநீர் ஓடை முறையாக அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், ஓடையில் குப்பைகள் நிரம்பி காணப்படுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, குப்பையை அகற்றி ஓடையை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-அப்துல் ரசாக், இனயம்.

நிழற்குடை அமைக்க வேண்டும்

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் பயணிகள் பஸ் ஏறும் இடத்தில் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் கோடை வெயிலிலும், மழை பெய்தால் மழையில் நனைந்தபடியும் நிற்க வேண்டியது உள்ளது. எனவே இந்த பகுதியில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்