< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
24 July 2023 12:45 AM IST

தினத்தந்தி புகார் பெட்டி

செடி, கொடிகள் அகற்றம்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட செக்கால தெருவில் அங்கன்வாடி அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடிக்கு செல்லும் நடைபாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது. இதனால், அந்த வழியாக பொதுமக்ககள் அச்சத்துடனேயே நடந்து சென்று வந்தனர். இதுபற்றி 'தினத்தந்தி' புகார் ெபட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் செடி, கொடிகள் அகற்றப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சேதமடைந்த மின்கம்பம்

ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சம்பகுளத்துக்கு மேற்கு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.

கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா?

தக்கலை கோட்டம் இரணியல் பிரிவு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படாமல் உள்ளது. இதனால், தலக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் வற்றி காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இரணியல் பிரிவு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, தலக்குளம்.

பெற்றோர்கள் அச்சம்

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மிடாலக்காடு பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையமானது இடிந்து முட்புதர்கள் படர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள சமூகநல கூடத்தில் செயல்படுகிறது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே, இடிந்த நிலையில் காணப்படும் அங்கன்வாடி மையத்தை அகற்றி விட்டு கழிவறை, விளையாடுவதற்கான இடவசதியுடன் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுஜன், மிடாலக்காடு.

சுகாதார சீர்கேடு

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட மாதவபுரம் சந்திப்பு பகுதியில் இருந்து சின்னமுட்டம் செல்லும் சாலையின் திருப்பத்தில் சிலர் குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றுவதுடன், இனிமேல் குப்பையை அங்கு போடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரதாஸ், மாதவபுரம்.

எரியாத மின்விளக்கு

ஏற்றக்கோட்டில் அரசு தொடக்கப்பள்ளியின் நுழைவாயில் அருகில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியன், ஏற்றக்கோடு.

வாகனம் அகற்றப்படுமா?

தக்கலை மார்க்கெட் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாசலில் தார்ச்சாலை போட பயன்படுத்தும் வாகனம் வருட கணக்கில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தனிஷ், தக்கலை.

மேலும் செய்திகள்