< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மது குடிக்க பணம் தர மறுத்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய கொடூர மகன்...!
|19 March 2023 8:11 PM IST
கன்னியாகுமரியில், மது குடிக்க பணம் தர மறுத்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் இலந்தவிளை பகுதியை சேர்ந்தவர் மேரி மார்கிரட். இவரது மகன் ஷர்லின் ஜோஸ். இவர் (ஷர்லின் ஜோஸ்) அவரது தாய் மேரி மார்கிரட்டிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார்.
ஆனால் மேரி மார்கிரெட் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ஷர்லின் ஜோஸ் பணம் தராததால் தனது தாய் என்றும் பாராமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மார்கிரெட்டை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார்.
தாயை தாக்கிய பின்னர் ஷர்லின் ஜோஸ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து மகன் தாக்கியதில் காயமடைந்த மார்கிரெட் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை தாக்கிய மகன் ஷர்லின் மற்றும் அவரது நண்பர்களை புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.