< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மின்னல் தாக்கி பசுமாடு செத்தது
|5 May 2023 12:15 AM IST
திட்டக்குடியில் மின்னல் தாக்கி பசுமாடு செத்தது
திட்டக்குடி
திட்டக்குடி வதிஷ்டபுரம் கிராமம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 62). விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இவர் மாடுகளை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் கட்டிப்போட்டிருந்தார். அப்போது இரவில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி பசுமாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர், கால்நடை மருத்துவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த பசுமாட்டை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.