< Back
மாநில செய்திகள்
ஐகோர்ட்டு தானாக வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும்
தேனி
மாநில செய்திகள்

ஐகோர்ட்டு தானாக வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும்

தினத்தந்தி
|
4 May 2023 1:00 AM IST

நிதி அமைச்சர் ஆடியோ விவகாரம் ஐகோர்ட்டு தானாக வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்துள்ளார் .

இந்து மக்கள் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் கம்பத்தில் நடந்தது. இதற்கு கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் தலைமை தாங்கி பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில், அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடந்த ஊர்வலத்தில் போலீஸ் நிலையத்தையும், போலீசாரையும் தாக்கினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரத்தை ஐகோர்ட்டு தானாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்த வேண்டும். தேனி மாவட்டத்தில் சனாதன இந்து எழுச்சி மாநாடு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வருகிற ஜூலை மாதம் நடைபெறுகிறது. இதில் அனைத்து இந்து சமய அமைப்புகளும் பங்கேற்கின்றனர். தமிழக- கேரள எல்லையில் தொடர்ந்து கனிம வளங்கள் அனுமதி சீட்டு இன்றி கடத்தி செல்வதை தடுக்கவும், கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்தும், லஞ்சத்திற்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக ஒலியெழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் காமேஷ்வரன், பொதுச்செயலாளர் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்