மயிலாடுதுறை
முறைகேடுகள் நடந்ததாக கவுன்சிலர்கள் புகாா்
|சீர்காழி நகராட்சியில் முறைகேடுகள் நடந்ததாக கவுன்சிலர்கள் புகாா் அளித்தனர்.
மயிலாடுதுறை;
சீர்காழி நகராட்சி கூட்டத்தில் நேற்று வெளிநடப்பு செய்த 7 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 3 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 10 கவுன்சிலர்கள் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மகாபாரதியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-சீர்காழி நகராட்சியில் சட்டவிதிமுறைகளுக்கு புறம்பாக கூட்ட அரங்கில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும். சாலை அமைத்தல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல் என்று பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் 10 கவுன்சிலர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.இதைத்தொடர்ந்து ராஜினாமா கடிதம் அளிக்காமல் 10 கவுன்சிலர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தி.மு.க. நகராட்சி தலைவர் மீது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.