< Back
மாநில செய்திகள்
மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
31 July 2022 11:37 AM IST

கும்மிடிப்பூண்டி அருகே மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீயில் எரிந்து நாசமானது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள அல்லிபுகுளம் கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 33). கொத்தனார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவலறிந்து தீயணைப்பு அலுவலர் முத்து தலைமையிலான கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுமையாக தீயில் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீஞ்சூர் அடுத்த விச்சூர் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் கம்பெனி உள்ளது. இந்த பெயிண்ட் கப்பெனியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.

திருவொற்றியூர், எண்ணூர், அத்திப்பட்டு, ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்துபற்றி மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்