< Back
மாநில செய்திகள்
குடிசை தீப்பற்றி எரிந்து நாசம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குடிசை தீப்பற்றி எரிந்து நாசம்

தினத்தந்தி
|
11 July 2023 12:02 AM IST

குடிசை தீப்பற்றி எரிந்து நாசமானது.

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள பெருமத்தூர் கிராமத்தில் தெற்கு தெருவை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர் நேற்று தனது குடிைச வீட்டை பூட்டிவிட்டு, பெரம்பலூர் செல்வதாக அருகில் இருந்தவர்களிடம் கூறி சென்றார். இந்த நிலையில் அவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் வேப்பூர் தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

மேலும் செய்திகள்