< Back
மாநில செய்திகள்
குடிசை வீடு எரிந்து நாசம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

குடிசை வீடு எரிந்து நாசம்

தினத்தந்தி
|
23 Jun 2023 12:08 AM IST

நெமிலி அருகே குடிசை வீடு எரிந்து நாசமானது.

நெமிலி அருகே அகவலம் கிராமத்தில் புதிய காலனியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 60), பழ வியாபாரி. இவர் தனது மனைவியுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை இவரது மனைவி சமையல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பிடித்து எரிந்தது. உடனே ராமதாசின் மனைவி வெளியே ஓடிவந்து தீயை அனைக்க கூச்சலிட்டதை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர்.

இருப்பினும் குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

மேலும் செய்திகள்