< Back
மாநில செய்திகள்
குடிசை தீயில் எரிந்து சாம்பல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குடிசை தீயில் எரிந்து சாம்பல்

தினத்தந்தி
|
7 Dec 2022 12:10 AM IST

குடிசை தீயில் எரிந்து சாம்பலானது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ஆறுமுகவள்ளி(வயது 32). இவர்களுக்கு சத்தியபிரியா(13), அபிநயா(11) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேகர் இறந்துவிட்டதால், ஆறுமுகவள்ளி பெரம்பலூர் அருகே குரும்பலூரில் ஆடுமேய்க்கும் தொழில் செய்துகொண்டு மேலப்புலியூர் சாலையில் குடிசையில் வசித்துவருகிறார். இந்தநிலையில் ஆறுமுகவள்ளி, அவரது மகள்களுடன் நேற்று காட்டிற்கு ஆடுமேய்ப்பதற்காக சென்றுவிட்டார். நேற்று இரவு 7 மணி அளவில் ஆறுமுகவள்ளியின் குடிசை திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தண்ணீரை ஊற்றி தீணை அணைத்தனர். இந்த தீவிபத்து குறித்து ஆறுமுகவள்ளிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர் தீவிபத்தில் சேதம் அடைந்த தனதுகுடிசைக்கு சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணக்கட்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், சூரிய சக்தி மின்விளக்கு ஆகியவை எரிந்து சாம்பலானது தெரிந்தது. உடனே இதுகுபற்றி பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிபத்துநடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தீவிபத்திற்கான காரணம் குறித்து அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். குரும்பலூரில் தீவிபத்து ஏற்பட்ட ஆறுமுகவள்ளிக்கு சொந்தமான 15 ஆடுகள் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு பாளையத்தில் கிடை அமர்த்தியபோது இடிதாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்