< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
|2 July 2022 2:34 PM IST
காஞ்சீபுரம் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த 6 மாதம் சம்பள பாக்கி உள்ளது. பலமுறை சம்பள பாக்கி குறித்து நிர்வாகத்திடம் கேட்டும் சரியான பதில் கூறாமல் இருந்துள்ளனர். 6 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி பெருமாள் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை தடுத்தனர். தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.