கள்ளக்குறிச்சி
சமையல் மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
|சங்கராபுரத்தில் சமையல் மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
சங்கராபுரம்
சங்கராபுரம் இந்திராநகர், வள்ளலார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாதர்சிங் மகன் மோகன்(வயது 45). மது குடிக்கும் பழக்கம் உடைய இவர் சங்கராபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.18 ஆயிரம் கடன் வாங்கிய மோகன் அதை திருப்பி தராமலும், ஓட்டலில் வேலைக்கு சரியாக செல்லாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது ஓட்டு வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்ற இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மோகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் ரஞ்சித் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.