< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
சமையல் கியாஸ் கசிந்து வீட்டில் தீப்பிடித்தது
|21 Feb 2023 12:15 AM IST
சமையல் கியாஸ் கசிந்து வீட்டில் தீப்பிடித்தது
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள கோடனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரமையா. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 45). தனது வீட்டில் சமையல் செய்வதற்காக புதிய கியாஸ் சிலிண்டர் மாட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த முத்துலட்சுமி அப்படியே விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். கியாஸ் பரவி வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரித்து நாசமானது. இதுகுறித்து உடனடியாக கிராம மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் ெதரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். முத்துலட்சுமி உடனடியாக வெளியேறி விட்டநிலையில் வீட்டில் வேறும் யாரும் இல்லாததால் விபரீதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து சாலைக்கிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.