கள்ளக்குறிச்சி
அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்
|கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி
மருத்துவக்கல்லூரி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் சேர்க்கை, மருத்துவ கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணி உள்ளிட்ட இதர பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மருத்துவ கல்லூரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மறுவாழ்வு இல்லம்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் அரசு மறுவாழ்வு இல்லத்தின் பழுதடைந்த கட்டிடங்களை பராமரிப்பது தொடர்பாகவும், இங்குள்ள பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கும் மற்றும் அரசு பயன்பாட்டுக்கு தேவையான இதர அலுவலகங்களை புதியதாக ஏற்படுத்த முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது கலெக்டர் ஷ்ரவன் குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், தி.மு.க. வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல்.ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.டி.முருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசு மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் இருந்தனர்.