< Back
மாநில செய்திகள்
புதிய பஸ் நிலையம் கட்டும் பணி விரைவில் தொடக்கம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புதிய பஸ் நிலையம் கட்டும் பணி விரைவில் தொடக்கம்

தினத்தந்தி
|
15 May 2023 12:15 AM IST

ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது. எனவே வருகிற 20-ந்தேதிக்குள் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்ய நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது. எனவே வருகிற 20-ந்தேதிக்குள் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்ய நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

புதிய பஸ் நிலையம்

ராமநாதபுரம் நகரில் முன்பு ரெயில்நிலையம் எதிரில் பஸ்நிலையம் செயல்பட்டு வந்தது. இதன்பின்னர் மக்கள் தொகை பெருக்கம், மாவட்ட வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களினால் பழைய பஸ்நிலையம் போதிய வசதிகள் இன்றி இருந்ததால் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்படி கடந்த 1986-ம் ஆண்டு ராமநாதபுரம் நகர் மைய பகுதியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது.

இந்த பஸ் நிலையம் அப்போதைய மக்கள் தொகை மற்றும் பஸ்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இருந்தது. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இங்கிருந்து சென்று வந்தன. மக்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் ராமநாதபுரம் பஸ்நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லவும் பயணிகள் ஏறிச்செல்லவும் நிற்கவும் முடியாமல் சிரமம் ஏற்பட்டு வந்தது.

ரூ.20 கோடியில்...

இதன்காரணமாக புதிய பஸ்நிலையம் கட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.20 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ்நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. பஸ் நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளதால் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளை வரும் 20-ந் தேதிக்குள் காலி செய்ய நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடைகளை காலி செய்ததும் பஸ்நிலைய கட்டிடங்களை இடிக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பஸ்நிலையம் கட்டும் வரை பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையம், மூலக்கொத்தளம் பகுதி போன்றவற்றில் இருந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்