அரியலூர்
மேம்பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்
|மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அரியலூர் தவுத்தாய்க்குளத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை பெரம்பலூரில் இருந்து தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு இருவழிச்சாலையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிக அளவில் வாகனங்கள் சென்று வர தொடங்கியதால் அரியலூரில் இருந்து அம்மாக்குளம் செல்லும் சாலையும், புறவழிச்சாலையும் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. மேலும் சாலையின் அருகே கோர்ட்டு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேம்பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணியை தொடங்கியுள்ளனர். ரூ.28 கோடி மதிப்பில் இந்த பாலம் கட்டப்படுகிறது. 45 மீட்டர் அகலத்திற்கு சாலையும், அணுகு சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. சாலையை அகலப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேம்பாலத்தில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் 250 மீட்டர் நீளத்திற்கும், தஞ்சாவூர் செல்லும் சாலையில் 400 மீட்டர் நீளத்திற்கும் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.