< Back
மாநில செய்திகள்
பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும்

தினத்தந்தி
|
23 May 2023 12:40 AM IST

பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும்

கும்பகோணம் பிடாரி குளம் ரோடு பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் வாய்க்காலை இணைக்கும் வகையில் கான்கிரீட் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டுமான பணிகள் மெத்தனப்போக்கில் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். நேற்றுமுன்தினம் காலை திடீரென பிடாரி குளம் பகுதியில் பாலம் கட்டுமான பணிகளுக்காக சாலையின் குறுக்கே பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. எந்தவித முன்அறிவிப்பும் இன்றி பள்ளம் தோண்டப்பட்டதால் இந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்பழகன் எம்.எல்.ஏ., துணை மேயர் சுப தமிழழகன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை எம்.எல்.ஏ. நேரில் அழைத்து முன் அறிவிப்பின்றி சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டிருப்பது குறித்து எடுத்துக்கூறினார். மேலும் உடனடியாக போக்குவரத்து தடைப்படாமல் இருக்க சாலையின் ஒரு பகுதியில் பாதை அமைக்கவும், விரைந்து பாலம் கட்டுமான பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணித்துறையினருக்கு பணிகளை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ. அறிவுறுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்