< Back
மாநில செய்திகள்
நாகர்கோவில், வெள்ளமோடியில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மறியல்;293 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவில், வெள்ளமோடியில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மறியல்;293 பேர் கைது

தினத்தந்தி
|
5 Aug 2022 11:43 PM IST

நாகர்கோவில், வெள்ளமோடியில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். 293 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜாக்கமங்கலம்,

நாகர்கோவில், வெள்ளமோடியில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். 293 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளமோடியில் மறியல்

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள வெள்ளமோடியில் நடந்தது.

மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமையில் நடந்த போராட்டத்துக்கு வட்டார தலைவர்கள் ஜெயசிங், செல்வராஜ், முருகேசன், காலபெருமாள், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

225 பேர் கைது

பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டதாக 25 பெண்கள் உள்பட 225 பேரை கைது செய்தனர்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜிலியஸ், மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவர்கள் முனாப், மகேஸ்லாசர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், பேரூராட்சி தலைவர்கள் மனோகரசிங், எட்வின் ஜோஸ், டென்சிங், அனீசா கிளாடிஸ், வட்டார தலைவர்கள் ஜெரால்டு கென்னடி, டென்னீஸ், வைகுண்டதாஸ், வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தங்கதுரை, வெள்ளிச்சந்தை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் தங்கராஜன், கடியப்பட்டணம் மார்ட்டின், ராஜன், பேச்சாளர் அந்தோணிமுத்து, ஜாண்மில்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் மறியல்

இதேபோல் விலைவாசி உயர்வை கண்டித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராபர்ட்புரூஸ், மாநில போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அருள் சபிதா, பால் அகியா, இளைஞர் காங்கிரஸ் நரேந்திரதேவ், நிர்வாகிகள் சகாய பிரவீன், சேவியர், தங்கராஜ், தவசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் 32 பெண்கள் உள்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்