< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளியின் மகனை தாக்கி, நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துனர் பனியிடை நீக்கம்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளியின் மகனை தாக்கி, நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துனர் பனியிடை நீக்கம்

தினத்தந்தி
|
4 Nov 2022 4:20 PM GMT

திருப்பூரில் மாற்றுத்திறனாளியின் மகனை தாக்கிய அரசு பேருந்து நடத்துநரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருப்பூர்,

திருப்பூரில் மாற்றுத்திறனாளியின் மகனை தாக்கிய அரசு பேருந்து நடத்துநரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. 80 சதவீத பார்வை குறைபாடு உடைய சத்யராஜ், இலவச பேருந்து பயண அட்டை மூலம் தனது மனைவி மற்றும் மகனுடன் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

மகளிருக்கான இலவச பேருந்தில் பயணித்ததால் மனைவிக்கு கட்டணம் இல்லாத நிலையில், தனக்கு துணையாக வரும் மகனுக்கு டிக்கெட் எடுக்க அவர் மறுத்துள்ளார். இதனால் நடத்துநருக்கும் சத்யராஜூக்கும் தகராறு ஏற்படவே, சத்யராஜின் மகனை நடத்துநர் முத்துக்குமார் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், நடத்துனர் முத்துக்குமாரை திருப்பூர் போக்குவரத்து பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்

மேலும் செய்திகள்