< Back
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் துடித்த கண்டக்டர்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் துடித்த கண்டக்டர்

தினத்தந்தி
|
29 Sept 2023 1:10 AM IST

கருங்கலில் ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் துடித்த கண்டக்டர்

கருங்கல்,

நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டார்லிங் தேவசிங் (வயது37). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலையில் நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். அந்த பஸ் மாலை 5.30 மணியளவில் கருங்கல் பகுதியில் வந்த போது தேவசிங்குக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியில் அலறி துடித்தார். இதைபார்த்த டிரைவர் பஸ்சை கருங்கல் பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு அவரை ஒரு ஆட்டோ மூலம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சு வலியால் அவதிப்பட்ட கண்டக்டரை தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்த டிரைவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் செய்திகள்