< Back
தமிழக செய்திகள்
படியில் நின்று கூலாக பீடி பிடித்த நடத்துநர்...அரசுப்பேருந்தில் பயணிகள் அதிர்ச்சி...!
தமிழக செய்திகள்

படியில் நின்று கூலாக பீடி பிடித்த நடத்துநர்...அரசுப்பேருந்தில் பயணிகள் அதிர்ச்சி...!

தினத்தந்தி
|
30 April 2023 8:30 PM IST

அரசுப்பேருந்தில் படியில் நின்று கூலாக பீடி பிடித்த நடத்துநரால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அரசுப் பேருந்தில் புகைப்பிடித்தபடி நடத்துநர் ஒருவர் படியில் நின்ற காட்சிகள், சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

பழனியில் இருந்து தேனிக்கு, 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. புறநகர் பகுதிக்கு பேருந்து சென்றபோது பயணிகளுக்கு டிக்கெட் வழங்காத நிலையில், பேருந்தின் பின்புற படிக்கட்டில் நின்று கொண்டு, நடத்துநர் புகைபிடித்துக் கொண்டிருந்தார்.

இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகள் பொதுமக்களுக்கு மட்டும்தானா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



மேலும் செய்திகள்