< Back
மாநில செய்திகள்
கண்டக்டர், டிரைவரை மர்மநபர்கள் தாக்கியதாக புகார்
திருச்சி
மாநில செய்திகள்

கண்டக்டர், டிரைவரை மர்மநபர்கள் தாக்கியதாக புகார்

தினத்தந்தி
|
23 Jun 2022 8:16 PM GMT

கண்டக்டர், டிரைவரை மர்மநபர்கள் தாக்கியதாக புகார் தெரிவித்து பஸ்சை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டம் நடந்தது.

சமயபுரம்:

திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்றது. இந்த பஸ்சை டிரைவர் அரியலூர் மாவட்டம் அமீனாபாத் வி.பி.என். நகரைச் சேர்ந்த கமல்(வயது 36) ஓட்டினார். லால்குடி அருகே உள்ள கீழரசூரை சேர்ந்த ஆசைத்தம்பி(53) கண்டக்டராக பணியில் இருந்தார். லால்குடி அருகே உள்ள மேலவாளாடி ெரயில்வே மேம்பாலத்தில் பஸ் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பஸ்சை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது பஸ் டிரைவருக்கும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் டிரைவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட கண்டக்டரையும் அந்த நபர்கள் தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் பஸ்சை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பஸ்சை அங்கிருந்து டிரைவர் ஓட்டிச்சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்