< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளவை - தமிழிசை சவுந்தரராஜன்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளவை - தமிழிசை சவுந்தரராஜன்

தினத்தந்தி
|
30 Aug 2024 1:49 PM IST

கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைக்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளவை. அமெரிக்காவுக்கு சென்றுள்ள முதல்-அமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தால் நல்லதுதான். புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். எப்போதும் அளிக்கப்படும் கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைக்கவில்லை. விடியல் அமெரிக்காவுக்கு போய் இருக்கிறது. இங்கே விடியுமா என்று தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகள்