நாகப்பட்டினம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
|தகட்டூர் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.
வாய்மேடு:
தொழிலாளர் சட்டங்களை மீண்டு்ம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தகட்டூர் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் பாலகுரு, பொருளாளர் முருகானந்தம், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதேபோல் திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் தலைமை தாங்கினார்.இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.