காஞ்சிபுரம்
விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் கலெக்டர் வழங்கினார்
|விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்டகலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்,விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்டகலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் என்ஜினீயரிங் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், கூட்டுறவு துறை சார்பில், 5 விவசாய பயனாளிகளுக்கு, விசைதெளிப்பான், தார்பாலின், தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். மேலும் நடமாடும் மண் பரிசோதனை நிலையவாகனத்தை பார்வையிட்டு பரிசோதனை முறைகள் பற்றி கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் (சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.