< Back
மாநில செய்திகள்
பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய கலெக்டர்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய கலெக்டர்

தினத்தந்தி
|
10 Sept 2023 12:08 AM IST

ஆற்றாங்கரை கிராமத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து கலெக்டர் கலந்துரையாடினார்.

பனைக்குளம்,

ஆற்றாங்கரை கிராமத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து கலெக்டர் கலந்துரையாடினார்.

பொதுமக்களை சந்தித்த கலெக்டர்

மண்டபம் ஊராட்சி ஒன்றியம், ஆற்றாங்கரை மீனவர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கிராம மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசின் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டத்தை பெற்று பயன்பெற வேண்டும், ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் தங்களுக்கு தேவையான வருவாய் துறை சான்றிதழ் உரிய காலங்களில் கிடைக்கப் பெறுகிறதா? எனவும், அதேபோல ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்றும், மேலும் குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் நேரடியாக கேட்டு அறிந்து, காலதாமதம் ஏற்பட்டால் தகவல் தெரிவித்தால் உடனடியாக தொடர்புடைய அலுவலருக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படும். மேலும் ஊராட்சி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

முன்னதாக ஆற்றாங்கரை ஊராட்சி பகுதி மக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா மாவட்ட கலெக்டருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இக்கூட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி.) முரளிதரன் உள்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்