< Back
மாநில செய்திகள்
ரூ.63 கோடி மானியம் பெறுவதற்கான ஆணை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ரூ.63 கோடி மானியம் பெறுவதற்கான ஆணை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்

தினத்தந்தி
|
12 Jun 2022 1:26 PM IST

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.63 கோடி மானியம் பெறுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

தமிழக முதல்-அமைச்சர் சென்னையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 3001 பயனாளிகள் சுயமாக வீடு கட்டிக் கொள்வதற்கு ஏதுவாக தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் ரூ.63 கோடியே 2 லட்சம் மதிப்பிலான அரசு மானியம் பெறுவதற்கான பணி நியமன ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். அவருடன் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் மனோகரன், உதவி நிர்வாக பொறியாளர்கள் கனகராஜ், குபேந்திரன், சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்