< Back
மாநில செய்திகள்
முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
16 Oct 2023 11:07 PM IST

திருவண்ணாமலை அருகே உடையனந்தல் பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை அருகே உடையனந்தல் பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1581 பள்ளிகளில் 88 ஆயிரத்து 988 மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்த படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை அருகில் உள்ள உடையானந்தல் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் மேல்செட்டிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் காலை உணவின் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்த அவர் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை பரிமாறினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

மேலும் 1581 பள்ளிகளிலுக்கு முதற்கட்டமாக ரூ.80 லட்சம் மதிப்பில் 75 ஆயிரத்து 650 தட்டுகள், டம்ளர்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். ஆய்வின் போது மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் சையித்சுலைமான், திருவண்ணாமலை ஒன்றிய குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் ரமணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், ஆணையாளர் பிரிதிவிராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

மேலும் செய்திகள்