< Back
மாநில செய்திகள்
வாக்காளர் தினத்தையொட்டி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வாக்காளர் தினத்தையொட்டி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
26 Jan 2023 2:02 PM IST

வாக்காளர் தினத்தையொட்டி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக கையில் பதாகைகளை ஏந்தி கோசங்கள் எழுப்பியப்படி பேரணியாகச் சென்றனர். இந்த பேரணி திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பரமேஸ்வரி, தேர்தல் தனி தாசில்தார் உதயம், திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதைபோல் பொன்னேரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் கனகவள்ளி, துணை வட்டாட்சியர் சம்பத் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பொன்னேரி அண்ணா சிலை வரை சென்று நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்