< Back
மாநில செய்திகள்
கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்

தினத்தந்தி
|
8 Oct 2023 12:45 AM IST

கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சிவகாசி மாநகர ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் கூட்டம் சிவகாசி பேப்பர் வணிக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் சுரேஷ்தர்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் கிரிதர் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர்கள் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் ஏ.பி.செல்வராஜன், லவ்லி கார்ட்ஸ் செந்தில்குமார், வக்கீல் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவகாசி ரெயில் நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கோவையில் இருந்து பழனி வழியாக மதுரைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இரவு 7.45 மணிக்கு மதுரைக்கு வந்து விடுகிறது. பின்னர் மீண்டும் அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.


இந்த ரெயிலை சிவகாசி வழியாக செங்கோட்டைக்கு இயக்கினால் இந்த வழியாக இரவு நேரத்தில் பயணம் செய்ய கூடுதலாக ஒரு ரெயில் கிடைக்கும்.எனவே கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலை செங்கோட்டை வரை இயக்க வேண்டும். மேலும் செங்கோட்டையில் இருந்து சிவகாசி வழியாக பெங்களூரு அல்லது மைசூருக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தென்னக ரெயில்வே அதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவில் தனசேகரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்