அரியலூர்
சுருள் கம்பியை திருடியவர் சிக்கினார்
|சுருள் கம்பியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கைக்களத்தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 48). இவர் தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தத்தனூர்-பரணம் சாலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் கம்பி சுருள் இட்டு காய்கறி விவசாயம் செய்து வருகிறார். அறுவடை முடிந்த பின்னர் 4 கம்பி சுருள்களையும் சுருட்டி கட்டி ஒரு ஓரத்தில் வைத்திருந்தார்.
சுமார் 60 கிலோ எடை கொண்ட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான அந்த சுருள் கம்பி திருட்டு போனது. இது குறித்து உடையார்பாளையம் போலீசில் தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கம்பி சுருளை திருடியது தத்தனூர் மேலூரை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் ராஜசேகர் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.