< Back
மாநில செய்திகள்
தென்னங்கீற்று கட்டுகள் தீப்பிடித்து எரிந்தது
விழுப்புரம்
மாநில செய்திகள்

தென்னங்கீற்று கட்டுகள் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
12 Feb 2023 12:15 AM IST

திண்டிவனம் மேம்பாலத்துக்கு கீழ் தென்னங்கீற்று கட்டுகள் தீப்பிடித்து எரிந்தது அருகில் நின்ற காரும் சேதம்

திண்டிவனம்

திண்டிவனம் மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் தென்னங்கீற்றுகளை விற்பனைக்காக குமரன் என்பவர் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த தென்னங்கீற்று கட்டுகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அவை நன்கு காய்ந்து இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் தீ மளமளவென அருகில் நின்ற கார் மீதும் பரவியதால் அதுவும் சேர்ந்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் நின்றவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்