< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பால் பரபரப்பு
|23 Oct 2023 12:30 AM IST
மசினகுடியில் வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
மசினகுடி பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மசினகுடி லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நாகப்பாம்பு புகுந்தது, இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் தகவலின் பேரில் சிங்காரா வனத்துறையினர் விரைந்து வந்து முரளி என்பவர் உதவியுடன் சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்து அடர்ந்த வனத்தில் விட்டனர். அதன் பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.