< Back
மாநில செய்திகள்
அரிசி அரவை ஆலைகளில் குடிமைப்பொருள் பிரிவு போலீசார் சோதனை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரிசி அரவை ஆலைகளில் குடிமைப்பொருள் பிரிவு போலீசார் சோதனை

தினத்தந்தி
|
7 Jun 2023 3:49 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி அரவை ஆலைகளில் குடிமைப்பொருள் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் குழுவினர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் அகரம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், புதுக்குறிச்சி, தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசி அரவை ஆலைகள் மற்றும் மாவு அரைக்கும் ஆலைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ஆலைகளில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை முறைகேடாக எடுத்துவந்து அரவை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்