< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வு
|13 Nov 2022 6:32 PM IST
திருவொற்றியூரில் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வு செய்தார்.
திருவொற்றியூர்,
தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு சென்னையின் பல்வேறு இடங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேக்கம், அகற்றும் முறை குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை திருவொற்றியூர் கார்கில் நகர் மின்மோட்டர் அறையினை பார்வையிட்டு மழைநீர் வெளியேற்றும் முறை குறித்து கேட்ட றிந்தார்.
பின்னர் கார்கில் நகர் உள்ளிட்ட திருவொற்றியூரின் மேற்கு பகுதியில் மழைநீர் தேங்காதபடி இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே. பி. சங்கர், மண்டல மழை கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ஸ்ரீதர், உதவி கமிஷனர் சங்கரன், மண்டல குழு தலைவர் தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.