< Back
மாநில செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
சிவகங்கை
மாநில செய்திகள்

கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி

தினத்தந்தி
|
31 Aug 2023 1:00 AM IST

கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பார்வையிட்டார்.

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்துக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா தனது குடும்பத்துடன் வந்திருந்தார்.

தலைமை நீதிபதியை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வரவேற்றார். தலைமை நீதிபதி குடும்பத்தினர் அருங்காட்சியகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டனர்.

கீழடி அகழாய்வு இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர் அஜய், காவ்யா ஆகியோர் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருட்கள் பற்றிய விவரங்களை நீதிபதிக்கு விளக்கினார்கள்.

ஐகோர்ட்டு பதிவாளர் ஜோதிராமன், சிவகங்கை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, முதன்மை நீதித்துறை நடுவர் சுதாகர், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் அதிகாரிகளும் வந்திருந்தனர். முன்னதாக தலைமை நீதிபதி, அகழாய்வு தளங்களையும் பார்வையிட்டு அதுபற்றிய விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்